2025 மே 15, வியாழக்கிழமை

வேலைவாய்ப்பை கோரி கோட்டாவைச் சந்திக்க பட்டதாரிகள் தீர்மானம்

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவைச் சந்தித்து, தமக்கான வேலைவாய்ப்பை விரைந்து வழங்குமாறு கோருவதென்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண வேலையற்றப் பட்டதாரிகள் தெரிவிதத்னர்.

யாழ்ப்பாணம் - ஆரியகுளம் பகுதியிலுள்ள முற்போக்கு வாலிபர் கழக மண்டபத்தில், இன்று (29) காலை, வடக்கு மாகாண வேலையற்றப் பட்டதாரிகளின் ஒன்றுகூடல் நடைபெற்றது.

வேலையற்றப் பட்டதாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணத் தலைவர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்காண பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த போதே, பட்டதாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

அங்கு தொடர்ந்துரைத்த பட்டதாரிகள், தமக்கான வேலைவாய்ப்புகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை, புதிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினர்.

குறிப்பாக, கடந்த அரசாங்கம் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்குவதாக கூறினாலும் குறிப்பிட்ட அளவிலானோருக்கே வேலைவாய்ப்பை வழங்கியதாகக் குற்றஞ்சாட்டிய பட்டாரிகள், இன்னும் பெருமளவிலானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லையெனவும் கூறினர்.

ஆகவே, அனைவருக்கும் பாகுபாடுகளின்றி வேலைவாய்ப்பை விரைந்து வழங்க வேண்டுமெனவும், பட்டதாரிகள் வலியுறுத்தினர்.

அத்துடன், வேலைவாய்ப்பை வழங்க வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு மகஜரொன்று கையளிப்பதென, இதன்போது முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .