2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள வடமாகாண வைத்தியர்கள்

எம். றொசாந்த்   / 2018 மே 16 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாத பட்சத்தில் எதிர்வரும் 28ம் திகதி முதல் தொடர்  வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வடமாகாண ஆளுநர் றெஜினோல் குரேக்கும் வடமாகாண அரச வைத்திய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, வடமாகாண சபை அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடுகளால் தாம் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் அதனால் வைத்தியர்கள் உட்பட பல அரச அலுவலர்கள் தமது நிலுவைகளைப் பெற பல ஆண்டுகளாக காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் வைத்தியர் சங்கத்தினர் ஆளுநரிடம் எடுத்துக் கூறினர்.

இதனையடுத்து, ஆளுநர் இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாத பட்சத்தில் எதிர்வரும் 28ம் திகதி முதல் தொடர்  வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .