2025 மே 15, வியாழக்கிழமை

வௌ்ளிக்கிழமை அவசரக் கூட்டம்

Editorial   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன் 

யாழ்ப்பாணம் மாநகர எல்கைக்குட்பட்ட நகரப் பகுதியில், பௌத்த சின்னங்களை வைக்கும் விவகாரம் தொடர்பில் ஆராயும் முகமாக, மாநகர சபையில், வௌ்ளிக்கிழமை (27) முற்பகல் 9.30 மணிக்கு, மாநகர பிரதி முதல்வர் து.சீசன் தலைமையில், அவசரக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக, சிறைச்சாலை நிர்வாகத்தால் பௌத்த சிங்கள மயமாக்கலைப் பிரதிபலிக்கின்ற சின்னங்களையும் கட்டுமானங்களையும் சட்ட விதிமுறைகளுக்கு முரணான விதத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.  

இவ்வாறு அனுமதியின்றி நடைபெறுகின்ற இந்தச் சிங்கள மயமாக்கல் தொடர்பாக ஆராய்வதற்கும் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் தொடராமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்குமே, இந்த அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .