2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வௌ்ளிக்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு

Mayu   / 2024 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ் தில்லைநாதன் 


சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினமான 30ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணி திரண்டு ஆதரவு வழங்குமாறு வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதுடன்இ சுமார் 15 ஆண்டுகளாக இன்னும் இதற்கு ஒரு தீர்வு இல்லை.

இந்த நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்குஇ கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கில் யாழ்ப்பாணத்திலும்இ கிழக்கில் திருகோணமலையிலும் காலை 10 மணியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளோம். என தெரிவித்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X