2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

விசேட அமர்வு ஒத்திவைப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வட மாகாணத்தில் தற்போது நிலவும் நீர்ப் பிரச்சினை தொடர்பில் நாளை புதன்கிழமை (22) இடம்பெறவிருந்த விசேட அமர்வு, எதிர்வரும் மார்ச் மாதம் 07ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இன்று (21) இடம்பெற்ற வடமாகாண சபை அமர்வின்போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இதனை அறிவித்தார்.

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தற்போது வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது சுகயீனமுற்றுள்ளதாலும் விசேட அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, அவைத்தலைவர் அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X