2025 ஜூலை 05, சனிக்கிழமை

விசுவமடு பொதுச்சந்தைக்கான நிரந்தரக் கட்டடம் அமைக்கப்படுகிறது

Gavitha   / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்;தீவு விசுவமடு பொதுச்சந்தைக்கான நிரந்தரக் கட்டடம்,  சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழுள்ள விசுவமடு பொதுச்சந்தைக்கான நிரந்;தரக்கட்டடம் அமைக்கப்படாததால், கடந்த ஐந்து ஆண்டுகளாக தற்காலிக கொட்டகைகளில் பெரும் சிரமங்களின் மத்தியில் இயங்கி வருகின்றது.

இதற்கான நிரந்தரக்கட்டடம் கடந்;த ஆண்டுகளில் அமைப்;பதற்கான நடவடிக்;கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், பொதுச்சந்தைக்குரிய காணிப்பிணக்கு காரணமாக அமைக்கப்படாமல் இருந்தது.

இதற்கான காணிப்பிணக்கு கடந்த ஆண்;டின் இறுதியில் தீர்;க்கப்பட்டதையடுத்து, தற்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபை நிதியிலிருந்து சுமார் 9 மில்லியன் ரூபாய் செலவில் புதிய கட்டடத்தொகுதி அமைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த கட்டடத்தின் கட்டுமானப்பணிகள் இவ்வருட இறுதிக்கும் நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .