Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜூன் 17 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், தான் ஏன் கஞ்சா செடியை வளர்த்தேன்? என்பதற்கு விநோதமான காரணத்தை கிளிநொச்சி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (17) கூறினார்.
கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த சந்தேகநபர் ஒருவரை கிளிநொச்சி பொலிஸார் வெள்ளிக்கிழமை (17) காலை கைது செய்தனர். மேற்படி நபர் 3 அடி உயரமளவு கஞ்சா செடியை தனது வீட்டில் வளர்த்திருந்தார்.
கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சி நீதிமன்றத்தில், நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்;ப்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேகநபரை கருத்துக்கூறுவதற்கு நீதிவான் அனுமதியளித்தார்.
'கிளிநொச்சியில் விற்பனை செய்யப்படுகின்ற கஞ்சா தரமான கஞ்சா இல்லை. மேலும், கஞ்சா விற்பவர்கள், தாங்கள் அணுகுண்டை உடமையில் வைத்திருப்பது போல ஓடித்திரிகின்றனர். இதனால் அவர்களிடமிருந்து கஞ்சாவை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. என்னால் கஞ்சா நுகராமல் இருக்க முடியாது. அதனால் தான் வீட்டில் கஞ்சா வளர்த்தேன்' இவ்வாறு சந்தேகநபர் கூறினார்.
இதனையடுத்து, சந்தேகநபரை உளநல வைத்தியரிடம் காண்பித்து, உளநல அறிக்கையைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார். மேலும் சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago