Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர் விடுதலைக் கூட்டணியை எவரும் சாதாரணமாக எடை போட்டு விமர்சனம் செய்ய முற்பட வேண்டாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் இரா.சங்கையா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் செவ்வாய்க்கிழமை (03) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்ககையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா இணைந்து செயற்படவுள்ளதாக வந்த செய்தியானது, அனைத்து தரப்பினரதும் விமர்சனங்களினாலும் கருத்துக்களினாலும் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தளவில் அந்த செய்தி முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும் சம்பவமாகவே பார்க்கப்படுகின்றது.
கருணா, தனிப்பட்ட விடயமாகவும் மரியாதை நிமித்தமாகவும் இரண்டொரு முறை எமது கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்துள்ளார். இச்சந்திப்பில்;, இன்றைய அரசியல் சூழ்நிலை உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கருணா இணைந்து செயற்படப் போகின்றார் என்று வீஆனந்தசங்கரியோ அல்லது எமது கட்சியை சார்ந்த வேறு எவருமோ தெரிவிக்கவில்லை.
அத்துடன், கருணாவும் அவ்வாறு தெரிவிக்கவில்லை. எமது கட்சியுடன் இணைந்து செயற்படும் தனது விருப்பத்தையே தெரிவித்துள்ளார். நிலைமை இவ்வாறு இருக்கும்போது இதை ஊதி பெரிதாக்கி விமர்சனம் செய்வது விரும்பத்தகாத ஒரு விடயமாகவே நாம் கருதுகின்றோம். எமது கட்சிக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்ற ஒரு நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது. எனவே அது சம்மந்தமான கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு அனைவரையும் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக நாம் ஒரு அணியை உருவாக்க முற்படுவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. நாம் யாருக்கும் எதிராக செயற்பட விரும்பவில்லை. ஆனால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதோடு அவர்களின் நியாயமான அபிலாசைகளையும் பூர்த்திசெய்ய வேண்டும். ஆனால், இங்கு மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக தாங்களே போராட வேண்டியுள்ளது.
நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்கள், காணாமல் போனவர்களை தேடி அலையும் போராட்டங்கள், வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகள், தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டங்கள் எதுவானாலும் சம்மந்தப்பட்ட மக்களே போராடித்தான் தீர்வு பெறவேண்டுமானால் மக்கள் பிரதிநிதிகள் எதற்காக? மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்தான் போராட வேண்டும இவ்வாறான செயற்பாட்டுகளுக்கு முன்னின்று போராடும் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளடங்கிய ஒரு புதிய அணியையே தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்க விரும்புகின்றது.
அல்லது இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளும் எவருடனும் இணைந்து செயற்பட விரும்புகின்றது' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago
3 hours ago