2025 ஜூலை 19, சனிக்கிழமை

வீடு புகுந்து திருடியவருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வரணி, கரம்பக்குறிச்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அத்துமீறி நுழைந்து பணம், புடவைகளை திருடிய நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (06) உத்தரவிட்டார்.

கடந்த 01ஆம் திகதி, வரணி கரம்பக்குறிச்சி பகுதியில் உள்ள வீட்டில் யாரும் இல்லாத நேரம் புகுந்த நபர், மேசையில் வைக்கப்பட்டிருந்த 3,000 ரூபாய் பணம் மற்றும் புடவைகளை திருடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (05) கைது செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X