2025 ஜூலை 19, சனிக்கிழமை

வெடி பொருள் மீட்பு

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரப்பாங்கண்டல் பாலைத்தாழ்வு கிராமத்தில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து சுமார் 10 கிலோ கிராம் எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடி பொருள் ஒன்றை திங்கட்கிழமை(04) காலை, மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த காணியின் உரிமையாளர் தோட்டச் செய்கை;காக குறித்த காணியில் உள்ள மேட்டு நிலப்பகுதியை உழவு இயந்திரத்தினால் உழுது கொண்டிருந்த போது, புதைத்து வைத்திருந்த வெடி பொருள் வெளியே தென்பட்டுள்ளது.

இது குறித்து மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் வெடி பொருளை இராணுவத்தினரின் உதவியுடன் மீட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X