Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 26 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்து நேற்று சனிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியமர இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியால் யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக நேற்று சனிக்கிழமை கையளிக்கப்பட்டன.
காங்கேசன்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணிவழங்கும் நிகழ்வில் வைத்து குறித்த காணிகளை பாதுகாப்பு செயலாளர் கையளித்தார்.
எனினும் குறித்த காணிகளை பார்வையிடுவதற்கு நேற்றையதினம் பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியிருக்கவில்லை.
எனினும், இன்றையதினம் பாதுகாப்பு வேலிகள் அகற்றப்பட்டதை அடுத்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமது காணிகளை தமது கிராம சேவையாளரிடம் பதிவுகளை மேற்கொண்ட மக்கள், விடுவிக்கப்பட்ட ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
கட்டுவன் ஜே-242, குரும்பசிட்டி ஜே-238, ஆகிய பகுதிகளில் 126.3 ஏக்கர் காணி, வறுத்தலைவிளான் ஜே-241 பகுதியில் 12 ஏக்கர் காணி, வடக்கு புகையிரதசேவையின் இறுதிப்பகுதியான காங்கேசன்துறையில் 63 ஏக்கர் காணி உள்ளடங்கலாக 201.3 ஏக்கர் காணி நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago