2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களில் மக்கள் வழிபாடு

Niroshini   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து செவ்வாய்க்கிழமை (29), விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஆலயங்களில் பொதுமக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

பலாலி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் 1990ஆம் ஆண்டு விட்டுச் சென்ற பூஜைப் பொருட்கள் அப்படியே இருந்துள்ளன. அங்கு பொதுமக்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

இதேவேளை, இன்னமும் விடுவிக்கப்படாமல் உயர்பாதுகாப்பு வலய வேலிக்குளம் அமைந்துள்ள பலாலி அம்மன் கோவிலை, முட்கம்பி வேலி எல்லையில் கற்பூரம் ஏற்றி மக்கள் வழிபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X