2025 ஜூலை 02, புதன்கிழமை

வீதிகளை திருத்தியமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஏழு வீதிகளை  திருத்தி அமைப்பதற்கு நிதி கிடைக்கபெற்றுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்ட விசேட நிதியின் கீழ், வீதிகளை திருத்துவதற்குரிய ஆரம்ப கட்டவேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. “பத்தமேனி செட்டிசீமா வீதி”, “வாதரவத்தை” , “வீரவாணி இணைப்பு வீதி”, “இருபாலை புதிய செம்மணி வீதி”, “இருபாலை தெற்கு வெள்ளத்தரவை வீதி”, “கோப்பாய் புது வீதி”, மற்றும் “கல்வியங்காடு வீதி” என்பனவே இவ்வாறு திருத்தியமைக்கப்படவுள்ளன.

நீண்ட காலமாக இவ் வீதிகள் சீரற்று, குண்டும் குழியுமாக காணப்பட்டமை தொடர்பில்   பிரதேச மக்கள் பிரதேச செயலரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பொதுத் தேவைப்பாட்டின் அடிப்படையில் குறித்த ஏழு வீதிகளை திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .