Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜெகநாதன்
'வைத்தியர்கள் மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்வியைப் பயின்று வைத்தியர்களாக வருகின்றனர். அவ்வாறு வரும் வைத்தியர்கள் அந்தந்தப் பிரதேசங்களில் சிறிது காலம் பணியாற்றுவதை வடமாகாண சுகாதார அமைச்சு கட்டாயப்படுத்த வேண்டும்' என வடமாகாண சபை
எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை (18) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில்,
'ஐஸ்கீறிம் பிரச்சினையை எழுப்பி, அதில் இருக்கும் சுகாதாரச் சீர்கேடுகளுக்காக விசேட படையணி மூலம் செயற்பாடுகளை மேற்கொண்டு, சுகாதாரச் சீர்கேடமான ஐஸ்கிறீம் கடைகளை மூடியது போன்று, உணவகங்களின் சுகாதாரம் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ்;ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பல உணவகங்கள் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்குகின்றன' என்றார்.
'குற்றங்கள் செய்தமைக்காக, சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்படும் சிறுவர்கள் அங்கிருந்து வெளியேறும் போது, இன்னும் மோசமானவர்களாக வெளியேறுகின்றனர். சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் சிறந்த வளவாளர்கள் இல்லாமையே இதற்குக் காரணம் ஆகும். இதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
23 minute ago
27 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
52 minute ago
1 hours ago