2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வைத்தியர்களின் கவனயீனம் காரணமாக ஒருவர் உயிரிழப்பு?

George   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.மகா

வைத்தியர்களின் கவனயீனம் காரணமாக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விசேட தேவையுடைய ஒருவர், திங்கட்கிழமை (17) உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (16) இரவு மணற்காட்டு பகுதியைச்சேர்ந்த விசேட தேவையுடைய 45 வயதுடைய ஆண், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், திங்கட்கிழமை (17) வரை குறித்த நபருக்கு சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், திங்கட்கிழமை (17) அவர் உயிரிழந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, குறித்த நேரத்தில் கடமையிலிருந்த வைத்தியர்கள் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .