2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி

George   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

நாடாளவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று வியாழக்கிழமை (03) மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்பால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் தற்போது மழை காலம் என்பதால், தொற்று நோய்களின் தாக்கத்துக்குள்ளாகிய பலர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தனர். 

எனினும், அவசர நோயாளிகள் தவிர்ந்த ஏனையோர் பார்வையிடப்படாமையால் அந்த மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வரவு- செலவுத் திட்டத்தில் தங்களுக்கான அடிப்படைச் சம்பள அதிகரிப்புச் செய்யப்படாமை, வாகன சலுகை நிறுத்தப்பட்டமை மற்றும் இதர நல விடயங்கள் எதுவும் சொல்லப்படாமை ஆகியவை காரணமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளது.

மகப்பேற்று, அவசர சிகிச்சை மற்றும் புற்றுநோய் பிரிவு தவிர்ந்த ஏனைய மருத்துவ சேவையினர் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .