2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 04 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கிளிநொச்சி, இயக்கச்சி கட்டைக்காட்டுப் பகுதியில் கடந்த 31ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி, இன்று புதன்கிழமை (04) உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்கச்சியைச் சேர்ந்த குணசீலன் நிறைஞ்சன் (வயது 20) என்ற 4 மாதக் குழந்தையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரே உயிரிழந்தார்.

மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .