Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 29 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டறவுச் சங்கம் அமைந்திருந்த இடத்துக்கு அருகில் இருந்த மூன்று ஆலயங்களில், வீரபத்திரர் ஆலயம் மாத்திரம் எஞ்சியுள்ளதாகவும், பிள்ளையார் மற்றும் அம்மன் ஆலயங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.
வலிகாமம் வடக்கில் கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த சனிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணிகளை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
1990ஆம் ஆண்டு இடம்பெயர்வுக்கு முன்னர் அப்பகுதியில் அருகருகே மேற்படி 3 கோவில்களும் இருந்துள்ளன. தற்போது, சென்று பார்க்கையில் வீரபத்திரர் ஆலயம் பற்றை மண்டி சேதமடைந்துள்ள நிலையில் உள்ளதுடன், ஆலயத்தின் மணிக்கோபுரமும் இருக்கின்றது.
ஆனால், அவற்றுக்கு அருகில் அமைந்திருந்து பிள்ளையார் மற்றும் அம்மன் ஆலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன என்று அம்மக்கள் தெரிவித்தனர்.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago