2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

வெள்ளநீர் தடுப்பு அணை நிர்மாணிப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

ஏ - 9 வீதியில், நாவற்குழியிலிருந்து கோப்பாய் வரையில் பாரிய வெள்ளநீர் தடுப்பு அணையை அமைக்கும் பணி, விவசாய அமைச்சின் கீழுள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தால், 13.44 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக, வடமாகாண விவசாய, நீர்ப்பாசன மற்றும் சூழலியல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்தார்.

'4.2 கிலோ மீற்றர் தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த அணைக்கட்டுக்காக, மத்திய அரசின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் 10.14 மில்லியன் ரூபாயும் வடமாகாண விவசாய அமைச்சின் 3.3 மில்லியன் ரூபாய் நிதியும் பயன்படுத்தப்படுகின்றது. மழை நீர்,  பயன்படுத்தப்படாமலே கடலுக்குச் செல்வதைத் தடுத்து, நன்னீரை சேகரிக்கும் நோக்கிலேயே இது அமைக்கப்படுகின்றது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

 'யாழ்ப்பாண நிலத்தடி நீர், பற்றாக்குறையாகியுள்ளதுடன், நிலத்தடி நீர் உவர் நீராக மாறுகின்ற நிலையும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் நோக்கில் இந்த அணைக்கட்டு அமைக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணைக்கட்டு போதிய பராமரிப்பின்மையால்,  உடைந்திருந்தது. இதனால் அதிகளவு நீர் விவசாய நிலங்களுக்குச் சென்று, செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையும் அழிவடைந்தது.

இவையனைத்தையும் கருத்திற்கொண்டே தற்போது புதிய அணைக்கட்டு அமைக்கப்படுகின்றது' என்று அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .