2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வாள்வெட்டுடன் தொடர்புடைய மேலும் 11 பேர் கைது

George   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும், 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்வியங்காடு, கோப்பாய், அளவெட்டி, சுன்னாகம், உரும்பிராய் பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர், வாள் மற்றும் கத்திகளை செய்து கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X