2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வாழைநார் அலங்கார பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு இல்லை

Gavitha   / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் நிர்வகிப்பின் கீழ் இயங்கும் ஐக்கிய வாழைக்குலை சங்கத்தின், நார் கைவினை பொருட்களுக்கு போதிய சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி தருமாறு பணியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வாழைத்தண்டில் நார்பொருட்களை கொண்டு இங்கு அலங்காரப்பொருட்கள் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதிய தொழில் நுட்ப வசதி இன்றி கழிவு தோட்டங்களில் வெட்டி அகற்றப்பட்ட வாழைத்தண்டுகளை சிறிய உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து இங்கு ஒவ்வொரு மடல்களாக பிரித்தெடுக்கின்றனர். இங்கு பிரித்தெடுக்கப்படும் ஒவ்வொரு மடல்களும் மீற்றர் அளவுக்கு ஏற்ப நார்களாகப்படுகின்றன.

இம் மடல்களை நார்களாக்கும் தொழிலாளர்களுக்கு மீற்றருக்கு ஏற்ப பணம் வழங்கப்படுகிறது.

பின்னர் அவை சிறிய இயந்திரத்தின் மூலம் மெல்லிய நூல்கள் ஆக்கப்பட்டு கயிறு போன்று திரிக்கப்பட்டு அலங்கார பொருட்கள் செய்ய பயன்படுகின்றது.

போதிய சந்தை வாய்ப்பு இன்மையால் உற்பத்தி செய்யப்படும் இப் பொருட்களை விற்பனை செய்வதில் பல சாவால்கள் காணப்படுவதாக பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் உற்பத்தி செலவினை குறைத்தால் விற்பனையினை கூட்ட முடியும் என கூறிய அவர், உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .