2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

முதலமைச்சர் நிதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் செவ்வாய்க்கிழமை (29) முதலமைச்சரின் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மிகவும் வறிய குடும்பங்களாக இனங்காணப்பட்ட ஒரு தொகுதியினருக்கே இவ் உதவி திட்டங்கள் வழங்கப்பட்டன.

இவ் உதவி திட்டங்களில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தக பைகள் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் பெண்களுக்கு சுய தொழிலை வழங்கும் வகையில் தையல் உபகரணங்கள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் போட்டோ பிரதி இயந்திரங்கள் போன்ற பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது,7 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X