Editorial / 2023 ஒக்டோபர் 18 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்
எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மராட்சி பகுதிகளில் புதன்கிழமை (18)துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இந்த துண்டு பிரசுரங்களானது தென்மராட்சி மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வடக்கு கிழக்கை முடக்கி ஹர்த்தால் போடுவதன் மூலம் பாதிக்கப்படுவது யார்? இந்த ஹர்த்தால் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் தீர்வு என்ன?காலங்காலமாக போடப்பட்ட ஹர்த்தால் மூலம் தமிழ் மக்கள் அடைந்த இலாபம் என்ன?
தெற்கை முடக்கினால் வரவேற்கத்தக்கது ஆனால் வடக்கு கிழக்கை முடக்கி மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவது வரவேற்கத்தக்கதன்று என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
1 hours ago