2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

எம். றொசாந்த்   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது உடமையில் ஹெரோய்ன் வைத்திருந்த குடும்பத்தலைவர் ஒருவரை, எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம், நேற்று  (21) உத்தரவிட்டார்.

குறித்த நபர், நல்லூர் பகுதியில் வைத்து, யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்தபோது, தான் நுங்கு விற்பவர் எனவும், தான் நுங்கு விற்கும் இடத்துக்கு அருகில் கிடந்த சுருட்டு ஒன்றை எடுத்தே, தன்னைக் கைதுசெய்துள்ளனர் எனவும் தெரிவித்த அவர், எனினும் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, வழக்கை ஆராய்ந்த பதில் நீதவான், சந்தேநபரை மே 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X