2025 ஜூலை 19, சனிக்கிழமை

அமைச்சுப் பதவியை எதிர்பார்க்கவில்லை

Niroshini   / 2016 ஜனவரி 06 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை நான் எதிர்பார்க்கவில்லை. அமைச்சராகவிருந்து கடந்த காலங்களில் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளேன். தொடர்ந்து வரும் காலங்களில் வெளியில் இருந்து மக்களுக்கு சேவை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இன்று புதன்கிழமை (06) தெரிவித்தார்.

மேலும், அமைச்சுக்கள் வழங்கப்படுவது தொடர்பில் கதைகளே பரவி வருகின்றன. ஆனால், அது தொடர்பில் எனக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோருக்கு பொங்கல் தினத்துக்குப் பின்னர் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில், நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவைத் திரட்டிக் கொண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகைள மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X