2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

59 ஆயிரம் ஏக்கரில் காலபோகச் செய்கை

Gavitha   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை காலபோக நெற்செய்கை, சுமார் 59 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள கல்மடுக்குளத்தின் கீழ் 3,450 ஏக்கர் நிலப்பரப்பிலும், பிரமந்;தனாறு குளத்தின் கீழ் 602 ஏக்கரிலும், கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள இரணைமடுக்குளத்தின் கீழ் 21,985 ஏக்கரிலும் கனகாம்பிகைக்குளத்தின் கீழ் 260 ஏக்கரிலும் புதுமுறிப்பு குளத்தின் கீழ் 985 ஏக்கரிலும் அக்கராயன்;குளத்தின் கீழ் 3,417 ஏக்கரிலும், வன்னேரிக்குளத்தின் கீழ் 346 ஏக்கரிலும், பூநகரி பிரதேசத்தில் உள்ள கரியாலை நாகபடுவான் குளத்தின் கீழ் 1,505 ஏக்கரிலும், குடமுருட்டிக்குளத்தின் கீழ் 1,100 ஏக்கரிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனைவிட, சிறிய குளங்கள் மற்றும் மானாவாரி (மழையை மட்டும் நம்பி) செய்கை ஆகியவற்றில் 25,350 ஏக்கரிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. காலபோக நெற்செய்கைக்கான உர விநியோகம் கமநல சேவை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .