2025 ஜூலை 19, சனிக்கிழமை

'ஆய்வுகூடத்தையே வதை முகாம் என்கின்றனர்'

Niroshini   / 2016 ஜனவரி 06 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இராணுவ முகாமுக்குள் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ ஆய்வுக் கூடத்தையே இராணுவ சித்திரவதை முகாம் என சிலர் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர் என இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்தார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை (05) வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

'மருத்துவ ஆய்வு கூடத்தை விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவே கூரையில் முட்கம்பிகளை அமைத்தோம். தற்போது, மக்கள் அந்த இடத்தில் மீளக்குடியேறியதையடுத்து, அந்த கம்பிகளை அகற்றி, வீட்டைச் சுத்தப்படுத்தியுள்ளோம்' என்றார்.

இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வீமன்காமம் பகுதியில் வீடொன்றில் வதை முகாம் எனச் சந்தேகிக்கும் வகையில் கூரையில் முட்கம்பிகள் இருந்ததுடன், இராணுவச் சீருடை உள்ளிட்ட ஆடைகளும் ஆவணங்களும் காணப்பட்டன.

ஊடகங்கள் வாயிலான இந்தச் செய்தி வெளியிடப்பட்ட பின்னர், அங்கு சென்ற இராணுவத்தினர் முட்கம்பிகளை அகற்றியதுடன், ஆதாரங்களையும் அழித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X