2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 ஜூன் 02 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நால்வரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற தற்காலிக நீதவான் கறுப்பையா ஜீவராணி இன்று வியாழக்கிழமை (02) உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் பகுதியில் இருந்து ஒரு விசைப்படகுடன் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை அப் பகுதியில் இரவு ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த கடலோரக்காவற்படையினர் கைது செய்திருந்தனர்.

பன்னீர்செல்வம் பாலகிருஸ்ணன் (வயது 31), அடைக்கலம் மணி (வயது 30), கலிகைபெருமாள் தியாகு (வயது 44), தோமஸ் சந்திரன் (வயது 49) ஆகிய நான்கு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

இன்று (02) காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்ட இவர்களை கடற்றொழில் நீரியல்வளதுறை மாவட்ட அதிகாரிகள் பெறுப்பேற்றனர்.

தொடர்ந்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X