2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

42 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

George   / 2017 ஜனவரி 05 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கடந்த வருடம் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 32 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடித்து, ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் இராமலிங்கம் சபேசன், இன்று உத்தரவிட்டார்.

கடந்த வருடம் இறுதியில், 6 படகுகளுடன்  வெவ்வேறு தினங்களில் கைதான 32 மீனவர்களின் விளக்கமறியலே இவ்வாறு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 10 பேரை, 2 விசைப்படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்திருந்தனர்.

இன்று அதிகாலை ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோமான முறையில் நுழைந்த இரண்டு விசைப்படகுகளை முற்றுகையிட்டதுடன், அதிலிருந்தவாறு மீன்பிடித்த 10 பேரையும் கைது செய்தனர்.

கைதான அனைவரும் தமிழ்நாடு ஜெகதாப்பட்டிணம் பகுதியினை சேர்ந்தவர்கள் என்பதுடன் இதில் இருந்த 15 வயது சிறுவன், அரச சான்றிதழ் பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் சேர்க்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X