2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

இறந்த பனைத் தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி

Niroshini   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில் முயற்சியின்போது மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த பனை, தென்னைச் சாற்று உற்பத்தித் தொழிலாளர்களின் ஆறு குடும்பங்களுக்கு வடக்கு கூட்டுறவு  அமைச்சால் வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.

வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், புதன்கிழமை (30), வடமாகாண சபை வளாகத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின்போது உரிய குடும்பங்களிடம் இதற்கான காசோலைகளைக் கையளித்துள்ளார்.

வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன், 2013ஆம் ஆண்டில் இருந்து பனை, தென்னை மரங்களில் இருந்து வீழ்ந்து இறந்த குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வாழ்வாதார நிதியாக வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதேவேளை, அண்மையில் 2016ஆம் ஆண்டுக்கான தனது அமைச்சுக்கான நிதி நிலை அறிக்கையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றியபோதும் இதனைத் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில், வடக்கு மாகாணத்தில் உள்ள பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஆறு குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X