2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'உள்ளூராட்சி மன்றங்களின் வருமான மூலங்களை கண்டுபிடிக்க வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

வடமாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்களை அதிகரிப்பதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் வருமான மூலங்களை கண்டுபிடிக்க வேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முதலமைச்சரின் கீழான அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று புதன்கிழமை (16) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஒவ்வொன்றுக்கும் இடையில் வருமான ஏற்றத்தாழ்வு காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய ஒரு சரியான திட்டமிடல் ஒன்று உருவாக்கப்படவேண்டும்.

வட மாகாணத்திலுள்ள வீதிகள் கடந்த 30 வருடங்களாக புனரமைக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றை புனரமைக்கக்கூடிய திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். வன்னியில் கட்டக்காலி மாடுகளும் யாழ்ப்பாணத்தில் கட்டாக்காலி நாய்களும் அதிகரித்துள்ளன. இதனால் போக்குவரத்துச் பிரச்சினையும் விவசாயத்துக்கு தடைகளும் ஏற்படுகின்றன. இதனை நிவர்த்தி செய்ய உள்ளூராட்சி உப அலுவலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாய்கள், மாடுகளை பதிவுகள் செய்து, அடையாளப்படுத்த வேண்டும். சாதாரண நாய்கள் குட்டிகள் போட்டால், குட்டிகளை வீதியில் கொண்டு வந்து விடுபவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் கையடக்கத்தொலைபேசி கடைகளுக்கு வரி அறவிடும் திட்டத்தை உள்ளூராட்சி மன்றங்கள் செயற்படுத்த வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X