2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

54 ஏக்கர் வயல் நிலத்தை பயன்படுத்த கோரிக்கை

Gavitha   / 2016 ஜூன் 06 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழ் 54 ஏக்கர் வயல்நிலம் பயன்படுத்த முடியாதளவுக்கு தரிசு நிலமாக காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் விவசாயிகளினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கராயன்குள நீர்ப்பாசனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே குறித்த வயல்நிலத்துக்கான  நீர்ப்பாசன வாய்க்கால்கள் உருவாக்கப்படாததன் காரணமாகவே மேற்படி வயல்நிலம் தரிசு நிலமாக காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் நடைபெற்ற விவசாயக் கூட்டங்களிலும் பயிர்ச்செய்கைக் கூட்டங்களிலும் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டதாகவும் குறித்த வயல்நிலத்தினை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துவதற்கு மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் விவசாயிகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X