Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கர்ணன்
'அனைத்து மக்களும் நடுநிலையாக இருந்து கொண்டால் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடியத் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம்' என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
புனருத்தாபனம் செய்யப்பட்ட பருத்தித்துறை -மருதங்கேணி வீதியை பொதுமக்களின் புதன்கிழமை (17) கையளித்துவிட்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடபகுதி மக்கள் பல துயரங்களை அனுபவித்தவர்கள். தேர்தலில் இடப்பட்ட ஆணையின் பிரகாரம் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.
வடக்கு, கிழக்கு வீதிகளைப் புனரமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் வடக்கில் 1500 கிலோமீற்றர் நீளமான வீதி, காப்பட் வீதியாக மாற்றப்பட்டிருக்கும். அதில், 700 கிலோமீற்றர் நீளமான வீதி, யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தது.
1815ஆம் ஆண்டு இருந்த கண்டி இராசதானி பற்றி எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், கருத்துத் தெரிவித்திருந்தார். கண்டி இராசதானி இருந்த போது மணமக்களை யாழிலிருந்து தேர்ந்தெடுத்தனர்.
எனினும், அது காலணித்துவ ஆட்சியில் இல்லாது போனது. எனினும், தற்போதைய ஜனாதிபதி, பிரதமரின் தலைமையில் மீண்டும் வடக்குக்கான நட்புறவை புதுப்பிப்போம் என்பதுடன் ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து இனத்துக்குமான கட்சி' என அவர் மேலும் கூறினார்.
3 minute ago
20 minute ago
41 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
20 minute ago
41 minute ago
50 minute ago