2025 ஜூலை 23, புதன்கிழமை

'ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும் விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள்'

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

காணாமற்போனோரின் உறவினர்கள் வழங்கிய சாட்சியங்களில் கூறப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றிருந்தாலும், அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

நீங்கள் சொல்கின்ற காலப்பகுதியில் நேரடியாக குற்றஞ்சாட்டப்படுகின்ற இராணுவ அதிகாரிகள் தற்போது ஓய்வுபெற்றுச் சென்றிருப்பார்கள். ஓய்வுபெற்றுச் சென்றாலும் அந்த அதிகாரிகள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படும். உங்கள் உணர்வுகளை மதிக்கின்றோம் என்றார்.

மேலும்,எங்களுடைய ஆணைக்குழுவிலுள்ள விசாரணைக்குழுவொன்று உங்களை வீடுகளுக்கு தேடிவந்து விசாரணைகளை மேற்கொள்வார்கள். அவர்கள் உங்களுக் எவ்வித துன்பங்களையும் தரமாட்டார்கள். நட்புறவாக பேசி விசாரணை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .