2025 ஜூலை 21, திங்கட்கிழமை

'குடிக்கலாமா? வேண்டாமா? தெளிவுபடுத்துங்கள்'

Niroshini   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுன்னாகம் மின்சார சபை வளாகம் அமைந்துள்ள பிரதேசத்தைச் சூழ்ந்துள்ள கிணறுகளின் நீரைப் பருகலாமா? இல்லையா என்பதை வட மாகாண சபை நிபுணர் குழு தெளிவுபடுத்தவில்லை என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று(28)அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நீரைக் குடிப்பது தொடர்பில் நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெளிவான பதில் இல்லை. இதன்மூலம் நிபுணர் குழு உண்மையை மறைக்க முற்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுகின்றது.

எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு, தூய நீர் பெறும் உரிமையை நிலைநாட்டவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .