2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

229 குடும்பங்களுக்கு தற்காலிக கூடாரம்

Gavitha   / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கடந்த 20 வருடங்களாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட, தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் மீள்குடியேறியுள்ள 229 குடும்பங்களுக்கு, தற்காலிக கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜே-236, ஜே-244, ஜே-252, ஜே-237, ஜே-241 ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 140 குடும்பங்களுக்கு சர்வதேசத் தொண்டு நிறுவனமான யூன்.எச்.சீ.ஆர் இன் செயற்றிட்டத்தின் கீழ், தற்காலிக கூடாரங்கள் கிடைக்கபெற்றுள்ளன.

மேலும், சேவா லங்கா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தற்காலிக வீட்டுத்திட்டத்தின் கீழ், ஜே-235, ஜே-236, ஜே-237, ஜே-238 ஜே-241 89 குடும்பங்களுக்கு தற்காலிகக் கூடாரம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் உள்ளடங்கியுள்ள இப்பகுதி, 30 வருடங்களின் பின்னர் கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் ஆர்வத்துடன் மீளக்குடியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .