Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் காணி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு, படிப்படியாக அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும்” அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 2017ஆம் ஆண்டுக்கான இளைஞர் யுவதிகளுக்கான மாநாடு, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சனிக்கிழமை (11) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, சமத்துவமான ஒரு கட்சியாகும். இதில் இன பேதம், மத பேதம் இல்லை. ஆதலால் தான், வட மக்களுடைய கவனத்தை அரசாங்கத்துக்கு கொண்டு செல்வதற்காகவே, நாடாளுமன்ற உறுப்பினராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
"அத்துடன், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்திலேயே எமது கட்சிக்கு, வட மக்களினால் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது என்பது, குறிப்பிடதக்கதோர் விடயமாகும்.
"தொழில் வாய்ப்புகளை அரசாங்கத்தால் எல்லோருக்கும் வழங்க முடியாது. ஆனால் முதலீடுகளை ஊக்குவிப்பதன் வாயிலாகவே, தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
எந்த நாடும், அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குவதில்லை. எனவே, கல்வி மற்றும் முதலீட்டுகளின் வாயிலாகவே வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் அரச தொழில் கிடைக்காது என்று இல்லை. அரச தொழில் வழங்கும்போது, விசேடமாக வடக்கு மக்கள் கவனம் செலுத்தப்படுவார்கள்.
"ஆதலால், நீங்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்“ என்றார்.
34 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
4 hours ago