2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

காணாமற்போனவை உயர்பாதுகாப்பு வலயத்துக்குள்

Niroshini   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக கடந்த 25 வருடங்களாகவிருந்து செவ்வாய்க்கிழமை (29) விடுவிக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடுகளின் ஓடுகள், நிலைகள் என்பன அகற்றப்பட்டு அவை உயர்பாதுகாப்பு வலய வேலிக்குள் அமைந்துள்ள வீடுகளுக்குள் அடுக்கப்பட்டுள்ளன.

வலிகாமம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள 701.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, புதன்கிழமை (30) அதனை மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

பலரது வீடுகள் அழிவடைந்த நிலையிலும், பல வீடுகளின் நிலைகள், ஓடுகள் அகற்றப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன.

உயர்பாதுகாப்பு வலய எல்லை வரையில் சென்று பார்த்தபோது, அங்குள்ள வீடுகளில் பெருமளவான ஓடுகள், மற்றும் நிலைகள் வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X