2025 ஜூலை 24, வியாழக்கிழமை

'காணாமல் போனோர் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமற் போனோர் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக் குழுவிலும் நாடாளுமன்றத்திலும் இவற்றுக்குப் புறம்பாகவும் எமது கட்சி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கருத்துகளுக்கு கருத்துகளால் பதில் கொடுத்து நாம் செயற்பட்டு வருகின்றோமே அன்றி கருத்துகளுக்கு ஆயுதங்கள் மூலமோ அல்லது இவ்வாறான ஆட்கடத்தல்கள் மூலமோ ஒருபோதும் பதில் கொடுத்து நாம் செயற்படுவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பதில் நாம் நம்பிக்கைக் கொண்டவர்களுமல்லர். அத்துடன் ஆட்கடத்தல்கள், மனிதப் படுகொலைகள், கொள்ளை, கப்பம் பெறல், வரி அறவிடல் போன்ற செயற்பாடுகள் எமது கட்சியின் கொள்கையோ வேலைத் திட்டமோ அல்ல.

இருந்தும், இவ்வாறான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் திட்டமிடப்பட்ட ரீதியில் அவ்வப்போது எம்மீது சுமத்தப்பட்டு வந்துள்ள நிலையில், முறையான சட்ட ரீதியிலான விசாரணைகளின் பின்னர், காலம் எங்களை நிரபராதிகளாக்கி நிரூபித்து வருகின்றது.

வடக்கில் 3,000 பேர் காணாமல் போனதற்கு ஈ.பி.டி.பி.யே காரணமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடாளுமன்றத்தில் அரசியல் குற்றச்சாட்டொன்றை முன்வைத்து வருகின்றனர்.

எனவே, அரசாங்கம் மேற்படி காணாமற் போனோர் விடயம் தொடர்பிலான குற்றச் சாட்டுக்கள் குறித்து உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகளை வெளிப்படுத்தப்பட வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .