2025 ஜூலை 19, சனிக்கிழமை

'குரல் கொடுக்க ஆயர் மீண்டும் வருவார்'

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, நலம் பெற்று மீண்டும் எங்களுடன் இணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க முன்வருவார் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இல்லத்துக்கு சனிக்கிழமை(09) சென்ற முதலமைச்சர், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை பார்வையிட்டப் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மறைமாவட்ட ஆயரின் உடல் நிலை தேறி வருகின்றது. ஆயரின் பேச்சுக்களை புறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. மீண்டும் மன்னார் மறைமாவட்ட ஆயர், நலம் பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக எங்களுடன் இணைந்து குரல் கொடுக்க முன்வருவார்.

அதற்கு இறைவன் இடமளிப்பார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X