Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 11 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
தடை செய்யப்பட்ட மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வலுவான சட்டமில்லை என யாழ்.மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மேலும்,எதிர்கால மீனவ சந்ததியினரின் வருமானத்தையும் நலனையும் கருத்திற்கொண்டு கடல்வளத்தையும் கடலுணவுகளின் இனப்பெருக்கத்தையும் பாதுகாக்கும் வகையில் சட்டவிரோதமான தொழிலில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்குவதற்கு வலுவுள்ள சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, யாழ்ப்பாண மீனவர்களுக்கு பல நாட்கலங்களை வழங்கவேண்டும், 5 வெளிச்ச வீடுகள் அமைக்கப்படவேண்டும், இடி, மின்னல் தாக்கத்துக்குள்ளாகும் மீனவர்களை பாதுகாக்க தேவையான இடங்களில் இடிதாங்கி அமைக்கப்படவேண்டும், நங்கூரமிட்டு வள்ளங்களை கட்டக்கூடிய மையங்களை அமைக்க வேண்டும், இயற்கை அனர்த்தங்களால் கடலுக்குச் செல்ல முடியாத மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், கடற்றொழில் பரிசோதகர்கள் நியமிக்கப்படவேண்டும், மீனவர்களின் கடன்களுக்குச் சலுகை வழங்கப்படவேண்டும், மீன்பிடித்துறை முகங்களில் எரிபொருள் நிலையங்கள் அமைக்கவேண்டும், தொழிலின் போது மரணிக்கும் மீனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .