2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'சுடுவதற்கு வந்தவர்களை ஈ.பி.டி.பி அலுவலகத்தில் கண்டேன்'

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

என்னைச் சுடுவதற்கு வந்தவர்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஸ்ரீதர் தியேட்டர் அலுவலகத்தில் கண்டதாக காணாமற்போனோர் தொடர்பில்  விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், மட்டுவிலைச் சேர்ந்த காணாமற்போன ஒருவரின் தந்தை சாட்சியமளித்தார்.

மேற்படி ஆணைக்குழுவின் சாவகச்சேரி அமர்வு பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

“என்னைச் சுடுவதற்கு திரிந்தவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்துக்குச் சென்றேன். அப்போது, நான் வீட்டில் இல்லாத போது என்னைச் சுட வந்தவர்கள் அங்கு நிற்பதாக எனது மனைவி எனக்கு கூறினார்.

நான் 'அவர்களை பார்க்காமல் வா' என மனைவிக்கு கூறி, அலுவலகத்துக்குள் சென்றேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X