2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சிறுப்பிட்டியில் மோதல்: ஐவர் வைத்தியசாலையில்

George   / 2016 ஜூன் 02 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் உட்பட ஐவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்.எஸ்.என்.கே.ஜெயசிங்க தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ள இந்த மோதலில், மாதன் இராஜகோபாலன் (வயது 54), இராஜகோபாலன் வசந்தகுமாரி (வயது 50), இராஜகோபாலன் இராஜபிரதாப் (வயது24), இராஜகோபாலன் யதீஸன் (வயது 23) ஆகிய ஓரே குடும்பத்தினை சேர்ந்த நால்வரும் கிட்டிணன் குணரட்ணம் (வயது 38) என்ற நபரும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி கூறினார். .  

தனிப்பட்ட காணிப்பிரச்சினை காரணமாகவே, இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும், வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் தடிகள், பொல்லுகள் சகிதம் மோதிக்கொண்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய நபர்;களைக் கைது செய்து, நீதிமன்றில் வழக்கு தொடர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X