Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, வன்னேரிக்குளம் பகுதியில் சுற்றுலா மையம் அமைப்பதற்கான அனுமதியினை வனவள அதிகாரிகள் வழங்காமையினால், அதற்கென கிடைக்கப்பெற்ற ஆறு மில்லியன் ரூபாய் நிதி திரும்பிச் சென்றுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்;பிள்ளை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் இன்று வியாழக்கிழமை தமிழ் மிரருக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கிளிநொச்சி, வன்னேரிக்குளம் பகுதியில் சுற்றுலா மையம் ஒன்றினை அமைக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் கீழ் உள்ள கிராமங்களின் பல்வேறுபட்ட அபிவிருத்தித்திட்டங்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட மாகாண நிதியில் இருந்து கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் சுற்றுலா மையம் ஒன்றினை அமைப்பதற்கென ஆறு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், இப்பகுதியில் சுற்றுலா மையம் அமைப்பதற்கான அனுமதியினை பெற்று அதன் பணிகள் ஆரம்பிக்கபட்ட நிலையில் வன இலாகாவினர் குறித்த சுற்றுலா மையம் அமையும் பகுதி தங்களது ஆளுகைக்குட்பட்ட பகுதியென தெரிவித்து அதற்கான கட்டுமானப்பணிகளை இடைநிறுத்தினர்.
குறித்த பகுதி நீர்ப்பாசனத் திணைக்களத்;துக்குச் சொந்தமான பகுதியாக காணப்படுகின்றது. அதற்கான அனுமதியினை நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கியிருந்தபோதும், வனவள அதிகாரிகள் திட்டமிட்டே இதனை இடைநிறுத்தியுள்ளனர் என்றார்.
மேலும்,2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பயன்பாடுகள் அற்று இருக்கும் காணிகள் வனவள திணைக்களத்தின் ஆளுகைக்கு உள்ளாக்க முடியும் என்றும் அதன் அடிப்படையில் இப்பகுதியும் உள்;வாங்கப்பட்;டுள்ளது எனவும் வனவள திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காணி அனுமதி இன்மையால் குறித்த சுற்றுலா மையம் அமைப்பதற்கென கிடைக்கப்பெற்ற நிதி திரும்பிச் சென்றுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
9 minute ago
12 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
41 minute ago