Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 15 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார்
'சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அந்த நாட்டு மக்களும் அரசும் நினைப்பது முக்கியம் வாய்ந்ததாக இருக்கின்றது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கைன்ஸ் வோக்கர் நெதகோன், யாழ்ப்பாணத்துக்கு புதன்கிழமை (15) விஜயம் மேற்கொண்டு, கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சரை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துக்கூறும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
முதலமைச்சர் தொடர்ந்து கூறுகையில்,
'சுவிட்சர்லாந்து நாட்டில், கன்ரோன் இடத்தில் இங்குள்ளதைப் போன்று சிறுபான்மை பெரும்பான்மை என்ற முறைமை இருந்தாலும், அவர்களுக்கான அதிகாரத்தில் வித்தியாசம் உள்ளது. சிறுபான்மையினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அவர்களை உயர்த்த வேண்டும் என்ற மனநிலையை தமது நாட்டு மக்களும் அரசும் கொண்டுள்ளதாகவும், அதனை இலங்கையிலும் ஏற்படுத்த தாம் உறுதுணையாக இருப்போம்' என தூதுவர் எனக்கு கூறினார்.
'இலங்கை, அரசியல் ரீதியான தீர்வை எதிர்நோக்கி உள்ள நிலையில், இதுவரை காலமும் நாம் எப்படி இருந்தோம் என்பதை விட்டு, இனி எவ்வாறு இருக்கவேண்டும் என தூதுவர் எனக்குத் தெளிவுபடுத்தினார்.
ஏதோ ஒருவிதத்தில் ஒருவரை கட்டுப்படுத்த வேண்டும் என்ற மனநிலை ஒரு இனத்துக்கு இதுவரை காலமும் இருந்தது. அதனைக் கைவிட்டு, நாங்கள் சேர்ந்து எவ்வாறு எமது செயற்பாடுகளை கொண்டு போக முடியும் என்பதை தூதுவர் தெளிவுபடுத்தினார்' என முதலமைச்சர் மேலும் கூறினார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago