Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஜெகநாதன், கி.பகவான்
“நாம் நாடாளுமன்றத்திலும் வெளியிலும், தமிழ்பேசும் மக்களை நாட்டின் தேசிய சொத்துகள் என்றே கருதிவருகின்றோம்” என, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுடன் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின்சக்தி நிலையம் யாழ்ப்பாணத்தின் எழுவை தீவில், மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"இலங்கையில் நூறு சதவீதமான பகுதிகளுக்கும் மின்சாரத்தை வழங்கும் நிகழ்வின் நிறைவுக்கு, நாம் அண்மித்து இருக்கின்றோம். இத்தகைய நிகழ்வுகளின்போது, தீவக பிரதேச மக்கள் கைவிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அமைச்சின் மூலமாகவும் மின்சார சபையின் மூலமும் நல்லிணக்க அமைச்சினாலும், தீவகப் பகுதி மக்களுக்கும் நாம் முன்னுரிமை வழங்கியுள்ளோம்.
"நல்லாட்சி அரசாங்கமானது இந்தச் சந்தர்ப்பத்தில், மக்களது நல்வாழ்விலே பங்குகொண்டு, வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையின் குறிக்கோளாகச் செயற்பட்டு வருகின்றது. தூர இடத்திலுள்ள எழுவைதீவுக்கு, சாதாரண கம்பி மூலம் மின் இணைப்புகள், மின்சாரத்தை வழங்கமுடியவில்லை. காரணம், எழுவை தீவின் பௌதீக சூழல் அவ்வாறு அமைந்துள்ளது. இருந்தும் மின்சார சபையின் பொறியியல் பகுதியினர் இம்மக்களை மறக்காது, இத்திட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதுமட்டுமன்றி யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடமும் இதற்கான ஆய்வினை மேற்கொண்டது” என்றார்.
“எமது நாட்டினுடைய தேசிய கீதத்தை எமக்குத் தெரிந்த மொழியில் பாடும்போதுதான் அது இன்பமாக இருக்கின்றது. இப்போது மட்டுமல்ல, நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது தேசிய கீதம், தமிழிலும் சிங்களத்திலும் பாடப்பட்டது. பின்னர் சிங்களத்தில் மாத்திரம் இசைக்கப்பட்டது. எங்களுடைய அரசாங்கத்தின் எண்ணம் வித்தியாசமானது.
"நாட்டிலுள்ள மக்களின் அந்தந்த மொழியில் தேசிய கீதம் பாடும்போதுதான், அதன் அர்த்தம் புரியும். நாங்கள் உங்களுடைய மொழியை, கலாசாரத்தை முழுமையாக அங்கிகரிக்கின்றோம். ஒரே நாட்டின் மக்களாக நாங்கள் வாழவேண்டும். அப்போதுதான் தேசியத்தின் மக்களாக கருதப்படுவோம். அதுதான் மனித நேயம்” எனவும் அவர் தெரிவித்தார்.
33 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
4 hours ago