2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'நட்டஈட்டு பதிவுகளை மேற்கொள்ளாதீர்கள்'

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஜெகநாதன்

காணிகளுக்குப் பதிலாக நட்டஈடு மற்றும் உதவிகள் வழங்குவது தொடர்பில் மேற்கொள்ளப்படும் பதிவுகளை முகாம் மக்கள் மேற்கொள்ள வேண்டாம் எனத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பதாவது,  

'உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் காணிகள் இருந்து தற்போது முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு, காணிகளுக்குப் பதிலாக நட்டஈடு மற்றும் உதவிகள் வழங்குவது தொடர்பான விண்ணப்பபடிவங்கள் பிரதேச செயலகங்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மக்களின் காணிகள் மக்களுக்கே ஒப்படைக்கப்படவேண்டும். அதற்கு பதிலாக நட்டஈடுகள் உள்ளிட்ட பிற விடயங்கள் கொடுக்கப்படக்கூடாது. அவ்வாறு விநியோகிக்கப்படும் விண்ணப்படிவங்களை முகாம் மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடாது.

அரசாங்கம் இவ்வாறு செய்வதாக எங்களுக்கு அறிவிக்கவில்லை. இராணுவம் தான் இவ்வாறான வேலையைச் செய்கின்றது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அலைபேசியில் கதைக்கவுள்ளேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X