Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
நொதேர்ன் பவர் நிறுவனத்துடன் மாகாண அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளது. இதனால் தான், சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கழிவு இல்லை என கூறி பூச்சாண்டி காட்டுகிறார்கள் என சுன்னாகம் கழிவு எண்ணெய் நீரினால் பாதிக்கப்பட்ட மயிலனி பகுதியினை சேர்ந்த எஸ்.சசிகுமார் தெரிவித்தார்.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) சுன்னாகம் நகரத்தில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்ட பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவரான சிவகுமார் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிபுணர் குழுவினரையும் மத்திய அரசாங்கத்திலும் மாகாண அரசில் உள்ளவர்களையும் கேட்கின்றோம். எங்கள் ஊரில் வந்து இரண்டு நாட்கள் தங்கி நின்று உங்களால் எங்கள் வீட்டு தண்ணீரை குடிக்க முடியுமா? உங்களால் குடிக்கு முடியும் என்றால் நாங்கள் குடிக்கின்றோம். ஆதாரங்கள் இருக்கின்றன.
நான்கு நாட்கள் நீரை எடுத்து வைத்து பார்த்தபோது எண்ணெய் படலங்கள் மிதக்கின்றன. கையில் எடுத்து பார்க்கும் போது ஈயப்படலம் தெரிகிறது. ஏன் நீங்கள் மூடி மறைக்கிறீர்கள்? உரும்பிராயிலும் நீர்வேலியிலும் வட்டுக்கோட்டையிலும் நீர் மாதிரி எடுத்து பரிசோதித்து விட்டு எண்ணெய் படலம் இல்லை என கூறுகிறீர்கள். சுன்னாகம் மயிலினி, ஏழாலை பகுதிக்கு வாருங்கள் அங்குள்ள நீரை எடுத்து பரிசோதனை செய்யுங்கள் என்றார்.
மேலும்,இப் பிரச்சினைக்கு உடனடியாக மத்திய அரசாங்கமோ, மாகாண அமைச்சோ தீர்வினை பெற தவறுமாயின் இவர்களுக்கு எதிராக வடபகுதி மக்களை ஒன்றாக்கி மக்கள் போரட்டத்தினை மேற்கொள்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 minute ago
40 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
40 minute ago
46 minute ago