2025 ஜூலை 23, புதன்கிழமை

'நான் அடையாளம் காட்டுபவரை அழைத்து வாருங்கள்'

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் எம்.சுவாமிநாதன் ஆகியோர் இந்தாண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி வவுனியா புனர்வாழ்வு முகாமுக்கு விஜயம் செய்த புகைப்படத்தில் எனது கணவர் உள்ளார் என காணாமற்போன விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான வேதா என்று அழைக்கப்படும் யோசப் சீலனின் மனைவி சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

எனது கணவர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. இந்நிலையில், புனர்வாழ்வு பெற்ற போராளிகளை சந்திக்கச் சென்ற அமைச்சர்களின் புகைப்படத்தில் எனது கணவர் இருக்கின்றார் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட ஆணைக்குழுவின் தலைவர், அது உங்கள் கணவர் தான் என்று உறுதியாகச் சொல்கின்றீர்களா எனக்கேட்டார்.

நான் காட்டும் நபரை எனக்கு நேரில் காட்டுங்கள், அவர் என் கணவரா இல்லையா என கூறுகிறேன் அந்த பெண் மிகவும் காட்டமாக பதிலளித்தார்.

அந்தப் பெண் காட்டும் நபரைப் பார்வையிடுவதற்கான நடவடிக்கை எடுப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .