Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 ஜனவரி 31 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஸன்
“மாகாணங்களுக்கான உரித்துக்கள் சம்பந்தமாகவும் அதிகார பகிர்வு விடயங்கள் சம்மந்தமாகவும் பல விடயங்கள் பேசப்பட்டு வரும்போது, மார்ச் மாத இறுதியில் தமது அறிக்கைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் இருக்கும் போது என்ன காரணத்துக்காக இலங்கை நிலைமாறுகால அபிவிருத்தி சட்டமூலம் எனும் சட்டத்தை கொண்டுவர உள்ளார்கள்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன், மாகாணங்களுக்கான சட்டங்கள் உரித்துக்கள் தொடர்பாக தெளிவாக வரையறுத்தப்பட்டு சட்டங்கள் கொண்டுவரப்படாமல் அவசரமாக இதுபோன்ற சட்டங்கள் கொண்டுவரப்படுவது தமக்கு ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கம், அனைத்து மாகாண சபைகளுக்கும் அங்கிகாரத்துக்காக அனுப்பி வைத்துள்ள இலங்கை நிலைமாறுகால அபிவிருத்தி சட்டமூலம் தொடர்பாக வடமாகாண சபையில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
“இதனை மத்திக்கு சகல அதிகாரங்களை எடுத்துக் கொள்வதற்காக ஒரு செயற்றிட்டமாகவே நான் காண்கின்றேன்.
2015ஆம் ஆண்டில் இருந்து எதிர்வரும் 15 ஆண்டுகளுக்கு அடைந்துகொள்ள வேண்டிய அபிவிருத்தி குறிக்கோள்களாக 17 குறிக்கோள்கள் தரப்பட்டுள்ளன. இத்தகைய குறிக்கோள்களை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், இதன் அடிப்படையிலேயே வட மாகாண சபையானது செயற்பட்டு வருகின்றது. அது அனைவருக்கும் பொதுவானது.
ஆனால், எங்களுக்கு என்று சில உரித்துக்கள் 13ஆம் திருத்த சட்டத்தின் மூலம் தரப்பட்டுள்ளது. வட மாகாணம் தொடர்பான திட்டமிடலை நாங்கள் செய்ய முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, இச்செயற்பாடானது எங்களது செயற்பாட்டுக்கு அமைவாக நடக்கின்றதா, அல்லது அதற்கு அப்பால் நடக்கின்றதா என்ற கேள்வியெழுகின்றது” என்றார்.
மேலும், இந்நிலையான அபிவிருத்தி குறிக்கோள்கள் சம்பந்தமாக சில விடயங்களை எடுத்து பார்த்தால், அரசாங்கமானது அதற்கு பாதகமாகதான் பல விடயங்களை செயற்படுத்தி வருகின்றது. அதாவது குறிக்கோள்களில் 16ஆவது குறிக்கோளான எந்தவிதமான வன்முறைகளை ஏற்படுத்த கூடிய விடயங்களை தவிர்த்தல் வேண்டும் என கூறுகின்றது. ஆனால், வடக்கில் அரசாங்கமானது ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரம் இராணுவத்தை குவித்து வைத்துக்கொண்டு தான் வன்முறைக்கு எதிராக பேசுகின்றார்கள். ஆகவே, நாம் பல விதமான விடயங்கள் தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன் பேச வேண்டியுள்ளதுடன், தற்போதும் பேசிக்கொண்டும் உள்ளோம்.
இந்த அடிப்படையில் நாங்கள் சில நடவடிக்கைகளை எடுக்கும் போது பல விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பலமிக்கதோர் இலங்கை எனும் தலைப்பில் தரப்பட்டுள்ள நூலில் ஒரு பக்கத்தில் வடக்கு, கிழக்கு பொருளாதார வாயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேநேரம் 2ஆம் பக்கத்தில் கிழக்கு மற்றும் வட-கிழக்கு பொருளாதார அபிவிருத்தி கருத்திட்டங்கள் என்பதின் கீழ் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் அது சார்ந்த பகுதியை கைத்தொழில் மற்றும் சுற்றுலாதுறை அடங்கிய பொருளாதார வலயமாக மாற்றுதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனூடாக விளங்கும் அர்த்தம், மத்திய அரசாங்கமானது மாகாண அரசாங்கத்துக்கு அப்பால் சென்று பெரும்பான்மை இனத்தவர்களை அங்கு கொண்டு வந்து குடியேற்ற கூடிய விதத்திலே இந்நடவடிக்கை அமைந்திருக்கின்றது. இதேபோன்று விவசாயதுறை மற்றும் விவசாய உற்பத்திகளை அடிப்படையாக கைத்தொழில் அபிவிருத்தி என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இவை அனைத்தும் முழு நாடும் ஒரே கருத்துடன் செல்கின்றது. ஒரேவிதமான பொருளாதார திட்டங்களை கருத்தில் எடுத்து செல்கின்றது. ஆகவே, இதனை நாங்கள் நடைமுறைப்படுத்தலாம் என்ற அடிப்படையில் சென்றால், மாகாணங்களுக்கு இருக்கின்ற உரித்துக்கள் பாதிக்கப்பட போகின்றன.
இது சம்பந்தமாக நாம் ஆராய வேண்டும். அதனை விடுத்து அதற்கு முன்னர் இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது” என தெரிவித்தார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago